உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On 2022-08-21 09:43 GMT   |   Update On 2022-08-21 09:43 GMT
  • பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

நாகர்கோவில்:

பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், தி.மு.க. மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசிலியான், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்புள்ள ஜீவா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தரநாத் மற்றும் நிர்வாகிகள் முருகேஸ்வரன், ஜெவின்விசு, ஜெய கோபால், அய்யப்பன், பரமேஸ்வரன், வெங்கடேஷ், ஸ்ரீ மணி கண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலைக்கும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News