வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு தின விழா
- போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.
- விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு தின விழா கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் விளையாட்டு தின நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என குழுவாக கொடி அணிவகுப்பு நடத்தினர். மாணவர்கள் உடற்பயிற்சி நடனம், பாம்-பாம் நடனம், டம்பில்ஸ் நடனம், ஏரோபிக் பந்து நடனம் மற்றும் லெசீம் நடனம் ஆடி மகிழ்வித்தனர்.
குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் விழாவில் பங்கேற்று விளையாட்டு தின கொடியேற்றினார்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 345-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சர்வதேச தடகள பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பிரிட்டோ ஜாய் கோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளில் நீல நிற அணி அதிக புள்ளிகள் பெற்று ஓவர் ஆல் சாம்பியன் சுழற்கோப்பையினை வென்றது.
முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ஆன்டணி, விளையாட்டு அணி தலைமை மாணவன் ஆதில் பெலிக்ஸ், மாணவிகள் வம்ஷிகா, அதிதி சந்திரசேகர், மெலிட்டா விக்ட்டி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் தலைமையில் நிர்வாக அதிகாரி டெல்பின், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆன்டணி, சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
விழா நிகழ்வுகளை மாணவர்கள் பெரிஸ் மத்தியூ மற்றும் அத்வெய்தா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.