உள்ளூர் செய்திகள்

விவேகானந்தபுரம் ஏகாட்சர மகாகணபதி மூஷிக வாகனத்தில் வீதி உலா

Published On 2022-07-01 09:52 GMT   |   Update On 2022-07-01 09:52 GMT
  • வருஷாபிஷேக விழாவையொட்டி நடந்தது.
  • திரளான பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஸ்ரீ ஏகாட்சர மகாகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4.45 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர் 5 மணி முதல் எஜமானர் சங்கல்பம் நிகழ்ச்சியும் விநாயகர் பூஜையும் நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், வேதிகா அர்ச்சனை, அக்னிகாரியம், திரவியாஹூதி, வேத ஆகம பாராயணம் போன்றவை நடந்தது.

அதன்பிறகுகாலை 6.45மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடந்தது. பின்னர் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை 5-ம் ஆண்டு வருஷாபிஷேக கலசாபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு ஏகாட்சர மஹா கணபதிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது.

பின்னர் அலங்கார தீபா ராதனையும் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் ஏகாட்சரமகா கணபதி எழுந்தருளி கேந்திர வளாகத்துக்குள் வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் ஏகாட்சர மகா கணபதிக்கு தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

இதில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் துணைத்தலைவர் நிவேதிதா பொதுச்செயலாளர் பான் உதாஸ் இணை பொதுச் செயலாளர் ரேகாதவே மூத்தஆயுட்கால ஊழியர்கள் அங்கிருந்த, கிருஷ்ணமூர்த்தி, கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் விவேகானந்தர் பாறை நினைவாலய நிர்வாக அதிகாரிஆர்.சி.தாணு, கேந்திர வளாக பொறுப்பாளர்கள் சுனில், ராமையா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News