உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே கடலில் குதித்து தாய்-மகன் தற்கொலை செய்தது ஏன்? - சப்-கலெக்டர் விசாரணை

Published On 2023-02-28 06:36 GMT   |   Update On 2023-02-28 06:36 GMT
  • மீனவர்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, 2-வது நாளில் குழந்தை மெர்ஜித் உடலும் மீட்கப்பட்டது.
  • ஆட்டோ டிரைவரிடம் கூறிச் சென்ற அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அது ஏன்? என்பது தான் மர்மமாக உள்ளது

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் மெல்பின் (வயது 37).இவர் மாலத்தீவில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி சசிகலா (32) மகன் மெர்ஜித் (3½) ஆகியோர் இங்கு வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று மகனுடன் ஆட்டோவில் மண்டைக் காடு அருகே உள்ள வெட்டு மடை கடல் பகுதிக்கு சசிகலா சென்றுள்ளார். அங்கு திடீரென மகனை கடலில் வீசிய அவர் தானும் கடலில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.அவர்களை சவாரி அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர், நீண்ட நேரமாக சசிகலா வராதது குறித்து அந்த வழியே சென்றவரிடம் தெரிவித்த பிறகு தான், சசிகலா தற்கொலை செய்த விவரமே தெரியவந்தது.

தொடர்ந்து சசிகலா உடல் கடலில் மிதந்ததால் உடனடியாக மீட்கப்பட்டது. ஆனால் குழந்தை உடல் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சசிகலா உடலை மீட்டு போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மீனவர்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, 2-வது நாளில் குழந்தை மெர்ஜித் உடலும் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் மாலத் தீவில் இருந்து மெல்பின் ஊர் வந்து சேர்ந்தார். அவர் வெட்டுமடை கடல் பகுதிக்கு வந்தார்.அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.அவருக்கு உறவின ர்கள் ஆறுதல் கூறினர்.

பின்னர் குழந்தையின் உடலையும் மரைன் போலீ சார் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், மகன் இருவரது உடல்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மெல்பினிடம் ஒப்படைக்கப்படுகிறது.

குளச்சல் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமை யிலான போலீசார் காதல் திருமணம் செய்த சசிகலா, கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், மகனுடன் கடலில் குதித்து தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக்கும், வெட்டுமடை வந்து சசிகலாவின் உறவின ர்களி டம் விசா ரணை நடத்தினார்.

சசிகலா வீட்டில் இருந்து தனது தாய் மற்றும் மகனுடன், பிரசன்னம் பார்ப்பதற்காக தான் சென்றுள்ளார். பின்னர் தாயை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, மகனுடன் ஆட்டோவில் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டு மடைக்கு வந்துள்ளார்.

வழியில் பிரியாணி பார்சலும் வாங்கிய அவர், கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் கை கழுவி வருவதாக ஆட்டோ டிரைவரிடம் கூறிச் சென்ற அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அது ஏன்? என்பது தான் மர்மமாக உள்ளது. இது குறித்து போலீ சார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News