ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த கர்நாடக மாநில சுகதாரத்துறை பணியாளர்
- ஓமலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்றிரவு ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இவர் நேற்று முன்தினம் இரவு தருமபுரியில் இருந்து ஈரோட்டுக்கு டிக்கெட் எடுத்துக் ரெயிலில் சென்றுள்ளார்.
ஓமலூர்:
ஓமலூர் காமாண்டப் பட்டியில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது.
இந்த தண்டவாளத்தில் நேற்றிரவு ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிணமாக கிடந்தவர் கர்நாடக மாநிலம் ஆணைக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பிரிவு பணியாளராக இருந்த நந்தகுமார் (வயது 29) என்பது தெரியவந்தது.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு தருமபுரியில் இருந்து ஈரோட்டுக்கு டிக்கெட் எடுத்துக் ரெயிலில் சென்றுள்ளார்.
அப்போது அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொன்று அங்கு வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
இறந்து கிடந்த நந்தகுமார் உடல் தற்போது தருமபுரி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் அங்கு திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.