பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
- ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது
- அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 10-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடம் தனி நபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.தற்போது அவர் ஆழ்துளை கிணறு தன்னுடைய இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என்று கூறுகிறார். இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கங்கைகொண்ட சோழபுரம் 10-வது வார்டு பகுதி மக்களும், மகாத்மா காந்தி நகர் பகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் கங்கைகொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.