உள்ளூர் செய்திகள் (District)

தோகைமலை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Published On 2023-06-23 07:41 GMT   |   Update On 2023-06-23 07:41 GMT
  • தோகைமலை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது
  • குளித்தலை கீதம் வெளியிட்டும் விஜய் ரசிகர்கள் அசத்தினர்

கரூர்,

நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் தோகைமலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம் தலைமையில், தோகைமலை ஒன்றிய தலைவர் சுரேந்தர் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், வடிவேல், பாஸ்கர், பொன்னர், அருண், ரமேஷ் மற்றும் பொன்னடி ஆகியோர் ஏற்பாட்டில் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். பின்னர் குளித்தலை கீதம் வெளியிட்டும் விஜய் ரசிகர்கள் அசத்தினர். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய நிர்வாகிகள் நிரோஷ் குமார், வினோத், தளபதி தியாகு மற்றும் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News