உள்ளூர் செய்திகள் (District)

கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா

Published On 2022-10-09 06:56 GMT   |   Update On 2022-10-09 06:56 GMT
  • கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது
  • மாணவ, மாணவிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்

கரூர்:

கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது. இதில் முதலாமாண்டு மாணவி சகாய செல்வராணி லியோ சங்க தலைவராகவும், ரசியா சுல்தானா செயலாளராகவும், அய்னுல்மர்லியா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டனர்.

விழாவின் சிறப்பு விருந்தினராக முதல் துணைநிலை ஆளுநர் லயன் இமயவரம்பன் கலந்து கொண்டு லியோ சங்க புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரை வழங்கி, மரக்கன்றுகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார். விழாவில் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரங்கன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் பயிற்சி ஆசிரியர்கள் அனைவரும் கற்பித்தல் பணியோடு, சேவை மனப்பான்மையுடன் நிகழ வேண்டும் என வாழ்த்தினார். விழாவில் சக்தி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சசிகலா சுந்தர்ராஜன், செயலாளர் திலகவதி மோகன்ராஜ், பொருளாளர் ராணி செல்வராஜ், சாசன தலைவர் ஜெயா பொன்னுவேல், மாவட்ட தலைவர் கவிதா கார்த்தீசன், லியோ சங்கங்களின் மாவட்ட தலைவர் லயன் ரவிச்சந்திரன் மற்றும் கரூர் சக்தி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பாரத சாரணர் இயக்க மாநில தலைமையக பயிற்சியாளர்கள் சண்முக நாச்சியார், அய்யன் துரை, பூரண சந்திரன், கஸ்தூரி பாய், பிரபாவதி ஆகியோர் சிறந்த சாரணர் சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர். மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுசூழல் விழிப்புணர்வும், உடல் நலம் பேணி காப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் சாந்தி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News