உள்ளூர் செய்திகள்

பறந்து கொண்டிருந்த மயில்கள் திடீரென மயங்கி விழுந்து செத்தது

Published On 2023-08-16 08:13 GMT   |   Update On 2023-08-16 08:16 GMT
  • கரூர் தவிட்டுபாளையத்தில் கரூர் பறந்து கொண்டிருந்த தேசிய பறவை மயில்கள் திடீரென மயங்கி செத்தது
  • விஷம் வைத்து கொல்லப்பட்டதா என சந்தேகம்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவிட்டுப்பாளையம் -கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் தேசிய பறவையான ஆண் மயில் இரண்டு பறந்து சென்று கொண்டிருந்தது. அவ்வாறு பறந்து கொண்டிருந்த மயில் திடீரென இறக்கையை அடிக்க முடியாமல் தவித்தது. இறக்கையை அடிக்கமுடியாத நிலையில், மயங்கிய கீழே விழுந்தது. பறந்து கொண்டிருந்த மயில்களில் திடீர் என்று மயங்கி டிரான்ஸ்பார்மர் அருகே விழுந்ததை கண்ட பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது மயில்கள் துடிதுடித்து செத்தது. இது குறித்து பொதுமக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து நாசப்படுத்தி வருவதால் சில விவசாயிகள் மயில்களுக்கு மருந்துவைத்து கொல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வைத்த மருந்தை தின்ற மயில்கள் பறக்கும்போதே மயங்கி விழுந்து செத்ததா? அல்லது டிரான்ஸ்பார்மர் அருகே பறந்ததால் மின்சாரம் ஏதும் தாக்கி மயில்கள் செத்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பறவையான மயில்கள் திடீரென செத்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News