உள்ளூர் செய்திகள்
- விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை காட்சி படுத்தினர்
- கலந்துரையாடலும் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டம் மூலம், மரபுசார் விளைபொருள் கண்காட்சி நடைபெற்றது.மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து அரசு திட்டங்கள் குறித்து பேசினார். கண்காட்சி அரங்குகளில், தங்கள் பகுதியில் விளையும் பாரம்பரிய நெல், பிற பயிர்களில் உள்ளூர் உயர் ரகங்களை விவசாயிகள் காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. இதில் கடவூர், கிருஷ்ணாயபுரம், குளித்தலை, தோகைமலை பகுதிக்கு உட்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.