உள்ளூர் செய்திகள்

கரூர் மாநகர பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-06-13 07:32 GMT   |   Update On 2023-06-13 07:32 GMT
  • கரூர் மாநகர பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்
  • நிர்வாகம் கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்

கரூர்,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போது எண்ணிலடங்காத வகையில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தொழில் நகரம் என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தங்களின் குடியிருப்புகளை நோக்கி செல்லும் பொதுமக்கள் முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை தெரு நாய்களின் நடமாட்டம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை மொத்தமாக பிடித்துச் சென்று, திரும்பவும் இதே பகு திகளில் இறக்கி விட்டு செல்லும் நிகழ்வும் தாந்தோணிமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கும் இந்த பகுதியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஒட்டுமொத் தமாக தெரு நாய்களின் நடமாட்டத்தையும், அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்த தேவை யான அனைத்து ஏற்பா டுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரு கின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.



Tags:    

Similar News