உள்ளூர் செய்திகள்

மே 2-ந் தேதி மத்திய அரசு தேர்வு பயிற்சி முகாம் தொடக்கம்

Published On 2023-04-28 06:52 GMT   |   Update On 2023-04-28 06:52 GMT
  • மே 2-ந் தேதி மத்திய அரசு தேர்வு பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது
  • கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

கரூர்:

கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது 7,500 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்விற்கான பணிக்காலியிடம், தேர்விற்கு விண்ணப்பித்தல் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் மே, 3க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 2ந் தேதி தொடங்குகிறது. சேர விரும்புவோர் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

மேலும் தங்கள் விபரத்தை 04324223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ, gmail.com என்ற இ.மெயில் studycirclekarur@ வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். https://tamilnaducareerservices.tn.gov.in 6760TM 6006007 இணையதளத்தில் போட்டி தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News