உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- பருவ மழை பெய்வதை முன்னிட்டு விவசாயிகள் உற்சாகம்
கரூர்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், விவசாயிகள் காய்கறி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, பாப்ப காப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்த ரப்பட்டி, திருக்காம் புலியூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் அதிகளவு காய்கறி சாகுபடி செய்து வருகின் றனர். வெண்டைக்காய், கத்திரிக்காய் களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய், கத்திரிக்காய், 30 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. காய்கறிகள் பறித்து லாலாப்பேட்டை, ஜெங்கொண்டம், மாயனுார் ஆகிய பழைய வார சந்தைகளில் விற்பனை செய்யப் படுகிறது. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.