உள்ளூர் செய்திகள்
இன்று கேதார கவுரி விரதம்: தருமபுரி கடைவீதியில் நோன்பு பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
- நோன்பு பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
- தருமபுரி கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தருமபுரி,
தீபாவளிக்கு பின் வரும் அமாவாசை அன்று ஆண்டுதோறும் சுமங்கலிகள், தங்களின் தாலி பாக்கியம் நிலைக்கவும், கணவரின் ஆயுள் காலம் அதிகரிக்கவும், வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் தொடரவும், கேதார கவுரி விரதம் மேற்கொள்வது வழக்கம்.
இன்று கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை ஒட்டி, தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள், தருமபுரி கடைவீதியில் குவிந்து நோன்பு கயிறு, தாலி கயிறு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட நோன்பு பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் தருமபுரி கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கேதார கவுரி விரதத்துக்கு, நோன்பு கயிறு உள்ளிட்ட பொருட்களை, பெண்கள் வாங்கிச் சென்றனர்.