திருமணமான 5 நாளில் மறுவீட்டுக்கு வந்த புதுப்பெண் கடத்தல்
- வீட்டில் இருந்த புதுப்பெண் திடீரென மாயமானார்.
- அதிச்சி அடைந்த கணவர் மற்றும் பெண் வீட்டார்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். எங்கும் கிடைக்க வில்லை.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூைர சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது23). இவர் வேடசந்தூர் பகுதியில்உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சங்கீதா வுக்கும் பாலாதோட்டத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும் 5 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண த்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் மறு வீட்டுக்கு வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென மாயமானார். இதனால் அதிச்சி அடைந்த பாண்டி த்துரை மற்றும் பெண் வீட்டார்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். எங்கும் கிடைக்க வில்லை.
இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அந்த புகாரில் எரிேயாடு பாகாநத்தம் புதூரை சேர்ந்த மில்வேன் டிரைவர் மனோஜ்குமார் (19) என்பவர் தனது மகளை கடத்தி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை தேடி வருகின்றனர்.