கோவில்பட்டியில் ஜான்போஸ்கோ பள்ளியில் அறிவியல் கண்காட்சி- 600 படைப்புகளை வைத்து அசத்திய மாணவர்கள்
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் செயல்பட்டு வரும் ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் பொன்விழா அறிவியில் கண்காட்சி நடைபெற்றது
- இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் செயல்பட்டு வரும் ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் பொன்விழா அறிவியில் கண்காட்சி நடைபெற்றது. இலக்குமிலை ஆலை மெட்ரிக் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, இயற்கை காற்றோட்டம் மற்றும் பொறியியல் துறை குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகள் பங்கேற்று சுமார் 600 படைப்புகளை வைத்து இருந்தனர். இயற்கை முதல் இன்றைய நவீன உலகில் மனித செயல்பாடுகளை குறைக்கும் கருவிகள் என பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் கை வண்ணத்தில் உருவாக்கபட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
மேலும் படைப்புகள் வைத்திருந்த மாணவர்கள் அதற்கான விளக்கத்தினை வழங்கினர். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இது போன்ற அறிவியல் கண்காட்சி தங்களுக்கு ஊக்கமாக இருப்பதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.