உள்ளூர் செய்திகள்

மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதியும் இ-சேவை மையம்- மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

Published On 2022-07-12 09:53 GMT   |   Update On 2022-07-12 09:53 GMT
  • வழக்கு கோப்புகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
  • கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் வழக்கு விவ ரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் இ-சேவை மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கின் விவரங்களையும் வழக்கு கோப்புகளையும் இணையதள வழியில் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு நடத்துபவர்கள் நீதிமன்றத்திற்கு நேரடியாக வராமல் வழக்கு தாக்கல் செய்யும் வசதி இணையமுகவரி மூலமாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இந்த சேவையை, தற்போது வழக்கறிஞர்களும், வழக்கு நடத்துபவர்களும் நீதிமன்ற வளாகத்திலேயே பயன்படுத்தி கொள்ளும் வகையில் இ-சேவை மையம் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

இதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தொடங்கி வைத்தார்.

இதில், வழக்கறிஞர்கள், வழக்கு நடத்துபவர்கள் தங்கள் பெயர், விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது வழக்கின் விவரங்களையும் வழக்கு கோப்புகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, தலைமை நீதித்துறை நடுவர் ராஜசிம்மவர்மன், மோட்டார் வாகன பிரிவு சிறப்பு சார்பு நீதிபதி இந்துலதா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி இருதயமேரி, மாஜிஸ்திரேட்டுகள் கார்த்திக் ஆசாத், ஸ்ரீவஸ்தவா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா, வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்த ராஜூலு,செயலாளர் ராஜாவிஸ்வநாத், மூத்த வழக்கறிஞர்கள், வக்கீல்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, அவருடைய வழக்கு கோப்பை முதல் வழக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல் பெற்றுக் கொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News