உள்ளூர் செய்திகள் (District)

கிருஷ்ணகிரி அணை, பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

Published On 2023-07-02 09:46 GMT   |   Update On 2023-07-02 09:46 GMT
  • நாளை திங்கட்கிழமை (3ம் தேதி) பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
  • 7 ஊராட்சிகளில் உள்ள 2,397.42 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை திங்கட்கிழமை (3ம் தேதி) பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்களில் திறந்துவிடப்படும் தண்ணீரால், பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதே போல் பாரூர் பெரிய ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கில்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 2,397.42 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதன்படி, நாளை திறக்கப்படும் தண்ணீரால் மாவட்டத்தில் மொத்தம் 11,409.42 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News