உள்ளூர் செய்திகள்

கடற்கரையில் உள்ள தற்காலிக கடைகளில் பக்தர்கள் மாலைகளை தேர்வு செய்யும் காட்சி.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா - கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள்

Published On 2022-09-14 08:57 GMT   |   Update On 2022-09-14 08:57 GMT
  • தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வேடம் அணிவதற்கு முன்பு விரதம் தொடங்கி உள்ளனர்.
  • பக்தர் தங்களது வசதிக்கு ஏற்ப மாலைகள் அணிந்து, குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு விரதம் தொடங்குவார்கள்.

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி பக்தர்கள் வேடம் அணிவதற்கு முன்பு விரதம் தொடங்கி உள்ளனர்.

மேலும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு, சிகப்பு, பச்சை அல்லது காவி நிற ஆடைகள் அணிந்து, பலவகையான மாலைகள், மற்றும் உத்ராட்ச மாலைகள் வாங்கி அதை கடல் நீரில் சுத்தம் செய்து விட்டு, கோவிலுக்கு வந்து சுவாமியின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்து விட்டு, பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

தங்களது வசதிக்கு ஏற்ப மாலைகள் அணிந்து, குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு விரதம் தொடங்குவார்கள்.

கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கப்படும் திருக்காப்பை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஒவ்வொரு ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவிலில் சேர்ப்பது தான் தசராவின் சிறப்பாகும்.

பக்தர்கள் விதவிதமான மாலைகள் வாங்கி விரதம் தொடங்குவதற்கு வசதியாக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட கடைகள் உருவாகி உள்ளன.

Tags:    

Similar News