உள்ளூர் செய்திகள்

தீசட்டி ஏந்தி வந்த பத்தர்கள்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று இரவு நிறைவு பெறுகிறது

Published On 2022-08-03 08:18 GMT   |   Update On 2022-08-03 08:18 GMT
  • ஆடிக் கொடை விழா கடந்த 1-ந் தேதிஇரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது.
  • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரைகோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

உடன்குடி:

தசரா திருவிழாவில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமர்கசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிக் கொடை விழா கடந்த 1-ந் தேதிஇரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது.

இரவு 10 மணிக்கு வில்லிசை, நேற்று காலை 7 மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் அன்னை முத்தாரம்மனுக்குசிறப்பு அபிஷேகம், பகல் 10 மணிக்கு கும்பம் தெரு வீதி வருதல், வில்லிசை மகுட இசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, மகுட இசை இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி வருதல். இரவு முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரைகோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். ஆண் பெண் பக்தர்கள் தீச்சட்டிஏந்திவருதல், வேல்குத்திவருதல். பால்குடம் எடுத்து எடுத்துவருதல்போன்ற பல்வேறு நேமிசங்களை அம்மனுக்கு செலுத்தினர். இன்று காலை 8 மணிக்கு அன்னதானம் நடந்தது.

காலை 9 மணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு கும்பம் வீதி உலா, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

கொடை விழா ஏற்பாடு களை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News