கும்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆய்வில் கண்டுபிடிப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல்த்துறை ஆய்வில் தகவல்
- இக்கோவிலின் சிறப்பு கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களாகும்
கும்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வரலாற்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்ப டுத்தும் குழுவும் இணைந்து இம்மா வட்டத்தின் பல்வேறு பகுதி களில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாறை ஓவியங்கள், கல்திட்டைகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோவில்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றின் வரலாற்றுச் சிறப்பினை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டும் வருகிறது.
அந்த வகையில் தளி அருகே கும்ளாபுரத்தில் மேற்கொண்ட ஆய்வி ன்போது அந்த ஊர் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது:
கும்ளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல்லால் வேலைப்பா டுகளுடன் கூடியதாகக் கட்டப்பட்டுள்ளது. கருவ றைக்கு மேல் உள்ள விமானப்பகுதி அண்மைக் காலத்தைச் சேர்ந்தது.
இக்கோவிலின் சிறப்பு கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜய குமார், வரலாற்று ஆய்வாளர் சரவணக்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த சிக்கண்ணா மற்றும் பலர் உடனிருந்தனர்.