உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு

Published On 2023-01-07 08:00 GMT   |   Update On 2023-01-07 08:00 GMT
  • கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
  • கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார்.

சேலம்:

சேலம் நிலவாரப்பட்டி செம்மலைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் வசிக்கும்

கந்துவட்டி தொழில் நடத்தி

வரும் ஒருவரிடம் ரூ.90 ஆயிரம் அவசரத்தே வைக்காக பணம் வாங்கியுள்ளார்.

அப்போது இவரிடம் கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கடனை திருப்பி கொடுத்த பிறகு அசல் பவர் பத்திரத்தை ரத்து செய்யுமாறு கருணாகரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்தவர் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கருணாகரன் சொத்தின் மீது வில்லங்கம் உள்ளதா என ஈசி போட்டு பார்த்துள்ளார். அப்போது கருணாகரனின் கையெழுத்தினை போட்டு போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தினை பணம் கொடுத்தவரின் தந்தையின் பெயருக்கு கிரயம் செய்துள்ளது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி யடைந்த விவசாயி இது குறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுமீதும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கருணாகரன் சென்னை உயர்தீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து விவசாயி கருணாகரன் மனுமீது உரிய விசாரணை நடத்தி 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News