உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

நில உரிமையாளர்கள், விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-08 09:11 GMT   |   Update On 2022-09-08 09:11 GMT
  • விவசாயிகளை பெருமளவில் திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.
  • 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சிபிசிஎல் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாநில தலைவர் ஆனந்தகுமார், போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தும் 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும், சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகளை பெருமளவில் திரட்டி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் இயற்கை வேளாண் விவசாயி பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பாளர் பார்த்தசாரதி மற்றும் சங்க நிர்வாகிகள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News