உள்ளூர் செய்திகள்

நகை திருட்டில் கைதானவர்கள்.

பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது

Published On 2023-05-13 08:05 GMT   |   Update On 2023-05-13 08:05 GMT
  • பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
  • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை பரவை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் குடும்பத்தினருடன் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பயணித்து வந்த அரசு பஸ் மண்டேலா நகர் பகுதியில் வந்தபோது, அந்த நபரின் மனைவி அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போயி ருந்தது.

இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், உடனே பஸ்சில் இருந்து இறங்கி அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விமலா நகை திருடியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்.

பஸ்சில் பயணித்து வந்தவர்களில் யாரோ தான் நகையை திருடிவிட்டு சென்றிருக்கவேண்டும் என்று கருதிய போலீசார், பஸ் நிறுத்தப்பட்ட நிறுத்தங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள், மண்டேலா நகர் பஸ் நிறுத்தத்தில் அவச ரமாக இறங்கிச்செல்வது அதில் பதிவாகியிருந்தது.

அந்த நபர்கள் தான், பெண்ணிடம் நகைகளை திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் நகையை பறி கொடுத்தவரும், அந்த 2 நபர்களும் பஸ்சில் தங்களின் அருகில் நின்றி ருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யதில் அவர்கள் அப்பன் திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம் பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது48), அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த பாண்டித்துரை(42) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News