- விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.
- உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மேலூர்
சிவகங்கை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சென்னகரம்பட்டி கிராமத்தில் வட்டார வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் சுபா சாந்தி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ் பூச்சி தாக்குதல் குறித்தும் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறை, அதன் பயன்பாடு, இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
பின்னர் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து கரிசல் கலைக்குழு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், சரவணகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னகரம்பட்டி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.