உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அழகர்கோவில் மலைச்சாலை

Published On 2023-04-05 09:37 GMT   |   Update On 2023-04-05 09:37 GMT
  • குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அழகர்கோவில் மலை சாலையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
  • முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. மலைமேல் முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

மதுரையில் சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு நாள்தோறும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல மலைச்சாலை உள்ளது.

இங்கு வாகனங்களுக்கு ரூ. 100, 50 வீதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்படுகிறது. மதுரை மக்களுக்கு அழகர்கோவில் மட்டுமே சுற்றுலாத்தலமாக உள்ளதால் நாள்தோறும் அங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால் அங்குள்ள மலைச்சாலை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி செப்பனிடப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மலைச்சாலை பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் சாலையை உடனே செப்பனிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News