உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

பாலதண்டாயுதபாணி கோவில் விசாக திருவிழா

Published On 2023-05-20 06:42 GMT   |   Update On 2023-05-20 06:42 GMT
  • பாலதண்டாயுதபாணி கோவில் விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
  • பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 101-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது.

இதை யொட்டி பாலதண்டாயுத பாணிக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம் செய்யப் பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேவல் கொடியேற்றி மயில் முன்பு சிறப்பு பூஜை செய்யப் பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டினர். அன்ன தானம் வழங்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலா பிஷேகம் வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. அன்று வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மவுன குருசாமி மடத்தில் இருந்து புறப்பட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகுகுத்தி, பூக்குழி இறங்கி 3 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக செல்கிறார்கள். பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து முருகன் பட்டுப்பல்லக்கில் எழுந்தருளி வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பல காரர்திருக்கண் வந்து அபிஷேகம் செய்யப்படு கிறது. பின்னர் கள்ளர் திருக்கண் வந்து எழுந்தருளி இரவு தங்குகிறார். 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சீர்பாதம் தாங்கி களுக்கு பாத்தியப்பட்ட கள்ளர் திருக்கண்ணில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவில் அருகில் ராமலிங்க சேர்வை தானமாக வழங்கிய இடத்தில் வைத்து மல்லிகை மலர்களால் பூப்பல்லக்கு அலங்காரிக்கப்படுகிறது.

பின்னர் பாலதண்டாயுத பாணி இரவு 12மணிக்கு மேல் நகரின் முக்கிய வீதிகளில் பல திருக்கண்களில் எழுந்தருளி காட்சி அளித்து விட்டு விடிய விடிய வீதி உலா சென்று மறுநாள் காலை 11 மணிக்கு கோவிலை அடைகிறார்.

3 நாட்களும் தினந்தோறும் இரவு நேரங்களில் ஆடல்பாடல், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், வாடிப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News