உள்ளூர் செய்திகள்

மின்சாரம் திருட்டு; ரூ.32.19 லட்சம் அபராதம் வசூல்

Published On 2022-06-19 08:49 GMT   |   Update On 2022-06-19 08:49 GMT
  • மதுரை மாவட்டத்தில் மின்சாரம் திருட்டு; ரூ.32.19 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
  • அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை

மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படை யில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அம லாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மீமிசல், கோட்டைப்பட்டினம், கொடிக்குளம், மணல்மேல்குடி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் மின் திருட்டு கண்டறி யப்பட்டது.

எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.29 லட்சத்து 55 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் மின்சாரம் திருடிய நுகர்வோர்களுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக நுகர்வோர்களிடம் மொத்தம் ரூ.32 லட்சத்து 19 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன் எண்: 94430-37508 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News