உள்ளூர் செய்திகள்

மதுரையில் மின் திருட்டு

Published On 2022-11-06 07:45 GMT   |   Update On 2022-11-06 07:45 GMT
  • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.18.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
  • மின் திருட்டு தொடர்பாக தகவல் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மதுரை

மதுரை மண்டல அம லாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட குருவிகுளம், திருவேங்கடம், தெற்கு அப்பர்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு, மீனவன்குளம், திருக்குறுங்குடி, ராஜாபுதூர் ஆகிய பகுதிகளில் 16 இடங்களில் மின் திருட்டு கண்டறியப் பட்டது. எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப் பட்ட வாடிக்கையாளர் களிடம் 16 லட்சத்து 92 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுதவிர வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 26 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News