மதுரையில் மின் திருட்டு; ரூ.4.70 லட்சம் அபராதம் வசூல்
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.4.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
மதுரை
மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வா ரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
"மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்கு டியை சேர்ந்த மின்வாரிய அமலா க்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.
அப்போது நெல்லை மின் பகிர்மான வட்ட த்துக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, கடையம், குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 8 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.
எனவே மின் வாரி யத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் 4 லட்சத்து ரூ. 43 ஆயிரத்து 318 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது தவிர வாடிக்கையா ளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ. 27 ஆயிரம் அபரா தம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்து 318 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூற ப்பட்டு உள்ளது.