உள்ளூர் செய்திகள் (District)

குறை தீர்க்கும் முகாம்

Published On 2022-12-10 07:50 GMT   |   Update On 2022-12-10 07:50 GMT
  • மதுரை மேற்கு மண்டலத்தில் வருகிற 13-ந் தேதி குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது
  • இந்த தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களின் குறை களை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

அதன்படி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் 5-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

இதில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு.

மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, பாலாஜி நகர், அவனியாபுரம்- அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News