உள்ளூர் செய்திகள்

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம்

Published On 2023-04-20 08:29 GMT   |   Update On 2023-04-20 08:29 GMT
  • மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
  • மின் திருட்டு கண்டறியப்பட்டது.

மதுரை

மதுரை மின்வாரிய மண்டலத்துக்குட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது நிலக்கோட்டை, என்.ஆண்டிபட்டி, கன்னிவாடி, ஒட்டன் சத்திரம், க.கீரனுார், சித்தை யன்கோட்டை, ஜவ்வாது பட்டி, கே.எஸ்.பட்டி, தர்மத்துப்பட்டி, ஆத்தூர், கலிமந்தையம், வேலாயு தபுரம், கொசவ பட்டி, மார்க்கம்பட்டி இடையகோட்டை, சின்னக் களையம் புத்தூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.9லட்சத்து 2ஆயிரத்து 96 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர்களிடம் 55ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டது.

மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக 9 லட்சத்து 57 ஆயிரத்து 96 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் 94430-37508 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News