உள்ளூர் செய்திகள்

வரலாற்றை அறிந்து வியந்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள்

Published On 2023-06-08 08:43 GMT   |   Update On 2023-06-08 08:43 GMT
  • பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் வரலாற்றை அறிந்து வியந்தனர்.
  • சிவாச்சாரி யார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது.

அலங்காநல்லூர்

தமிழ் கடவுள் முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மலை மேல் இருக்கிறது. மேலும் மலையின் மீது ராக்காயி அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் பதினெட் டாம்படி கருப்பணசாமி, கள்ளழகர் கோவில் இருக்கி றது.

இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக் தர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்ற னர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 சுற்றுலா பயணிகள், அழகர்கோவிலுக்கு வந்த னர். அவர்கள் முருகப்பெரு மானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும், சிவாச்சாரி யார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விபூதி பூசிக் கொண்டனர். மேலும் அவர்கள் கோவில் வெளி மற்றும் உள் பிரகாரத்தையும், சஷ்டி மண்டபத்தையும் பார்த்து அங்குள்ள உற்சவர் சுவாமியை வணங்கினர். மேலும் சுவற்றில் வரையப் பட்டுள்ள ஓவியங்களையும் பார்த்து, அவற்றின் வர லாற்றை அறிந்து வியந்தனர்.

முன்னதாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி வரவேற்றார். அவருடன் திருக்கோவில் பணியாளர்கள் உடனிருந்த னர்.

Tags:    

Similar News