மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா வருகிற 12ந் தேதி நடக்கிறது.
- சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை
தமிழ் மரபில் பதினெண் சித்தர்களுள் ஒருவர்- சுந்தரானந்தர். இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். சட்டைமுனி சித்தரின் சீடர். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி, சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். 'வாக்கிய ஆத்திரம், வைத்தியத்திரட்டு, தீட்சா விதி, சிவயோகஞானம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா, பழைய திருக்கல்யாண மண்ட பத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்க உள்ளது. அப்போது சுந்தரானந்த சித்தருக்கு திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி நடக்க உள்ளது.
இதனைத்தொடர்ந்து "எல்லாம் வல்ல சித்தர்கள்" என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானச ம்பந்தன் சொற்பொழிவாற்றுகிறார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரத்தை கவுரவித்து பணமுடிப்பு பழகுகிறார். அதன் பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் மூர்த்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.