உள்ளூர் செய்திகள்

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் மதுரையில் இன்று விழிப்புணர்வு பேரணி மற்றும் மனிதசங்கிலி நடத்தினர். அதில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி வந்த காட்சி.

மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-19 09:20 GMT   |   Update On 2022-09-19 09:20 GMT
  • உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய பேரணி திருவள்ளுவர் சிலை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சாலை வழியாக மருத்துவ கல்லூரிக்கு வந்தடைந்தது.

மதுரை

மதுரை அரசு மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதில் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய பேரணி பனகல் சாலை, திருவள்ளுவர் சிலை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சாலை வழியாக மருத்துவ கல்லூரிக்கு வந்தடைந்தது.

இதில் அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை கண்காணிப்பாளர் தர்மராஜ், நிலைய மருத்துவ அதிகாரிகள் ஸ்ரீலதா, ரவீந்திரன், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News