உள்ளூர் செய்திகள்

மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் முன்பு வெங்கடேசன் எம்.பி. தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

எம்.பி. உள்பட 350 பேர் கைது

Published On 2022-06-23 10:20 GMT   |   Update On 2022-06-23 10:20 GMT
  • “அக்னிபத்” திட்டத்திற்று எதிர்ப்பு மதுரை ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எம்.பி. உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பாதுகாப்பு ேபாலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் பலர் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை

இந்திய ராணுவத்தில் அக்னிபத் வீரர்கள் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்கலை கண்டித்தும் மதுரை ெரயில் நிலையம் முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று காலை முதல் பெரியார் பஸ் நிலையம் மருதுபாண்டியர் சிலை அருகில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் எம்.பி. தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் அங்கு திரண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சியினர் வெங்கடேசன் எம்.பி. தலைமையில் பேரணியாக மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத கம்யூனிஸ் கட்சியினர் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு ேபாலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் பலர் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை மோசமாகவே ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற வெங்கடேசன் எம்.பி. உள்பட 350-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News