உள்ளூர் செய்திகள்
- திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழா நடந்தது.
- மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அன்னதான பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையெட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன் திரளி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜாராம் ஊர் நாட்டாமை அழகர்சாமி விழா கமிட்டி நிர்வாகி பழனி முருகன் மற்றும் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் மகளிர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.