உள்ளூர் செய்திகள்

சுத்திகரிப்பு குடிநீர் திட்டத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

சுத்திகரிப்பு குடிநீர் அறை திறப்பு

Published On 2023-07-21 09:47 GMT   |   Update On 2023-07-21 09:47 GMT
  • ரூ.15 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு குடிநீர் அறையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. தற்போது கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்க ளின் சிறப்பு நிதியை அந்தந்த நூலகங்களுக்கு ஒதுக்காமல் மதுரையில் உள்ள கலைஞர் நூல கத்திற்கு பயன்படுத்தி யுள்ளனர். இதனால் மற்ற நூலகங்கள் பாதிக்கப்படும்.

மதுரையில் நிரந்தரமாக கண்காட்சி கூடம் அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பஸ்நிலையம் அருகே உள்ள 5 மதுக்கடை களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் தவிடன், பாலா, நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News