உள்ளூர் செய்திகள்

நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

Published On 2023-06-07 08:18 GMT   |   Update On 2023-06-07 08:18 GMT
  • திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
  • காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.

திருமங்கலம்

திருமங்கலம் நகராட்சி 5-வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நகர்புற நலவாழ்வு மையத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருக்குமார், திருமங்கலம் நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவர் டாக்டர் அருண்பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் வீரக்குமார்,சின்னசாமி, ஜஸ்டின்திரவியம், பெல்ட்முருகன், வினோத், சரண்யாரவி, மச்சவள்ளி,ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், முத்துகாமாட்சி, மங்களகவுரி, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா, செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் முத்து, சுகாதார அலுவலர் சண்முகவேலு ஓவர்சீஸ் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சுகாதாரமையம் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.

Tags:    

Similar News