- பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.
மதுரை
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.1000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கமாக வழங்கப்பட்டு வந்த கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட வில்லை.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்க கோரி இன்று மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில விவசாய அணி செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் சுசீந்திரன் (மாநகர்), சசிக்குமார் (மேற்கு), ராஜ சிம்மன் (கிழக்கு) ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுசீந்திரன் பேசியதாவது:-
திராவிட மாடல் அரசு என்று ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. டாஸ்மாக் வியாபாரத்தில் கவனம் செலுத்தும் இந்த அரசு, விவசாயிகளை பாதுகாக்க தவறி விட்டது.
மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை பெற்று விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு விவசா யம் செய்துள்ளனர். அந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பொங்கல் தொகுப்புடன் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், நிர்வாகிகள் ராஜரத்தினம், சோலை மணி கண்டன், வினோத்குமார், ராஜா, ஏர்போர்ட் கார்த்திக், கீரைத்துறை குமார், மீனா இசக்கி, மணிமாலா, தமிழ்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.