உள்ளூர் செய்திகள்

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-04 07:37 GMT   |   Update On 2023-09-04 07:37 GMT
  • திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தில் அமைந்துள்ளது காட்டுபத்திரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபணிகள் தொடங்கின. இதனை யொட்டி புதியதாக சிவபெருமான் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி மற்றும் மடப்பள்ளி அமைக்கப்பட்டது. 31-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் சிவாச்சாரியார் சங்கர நாராயணபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்தனர். காலை 6.20 மணிக்கு காட்டுபத்திர காளியம்மன் கோவில் கோபுரவிமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள், மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடத்தின.

இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையாளர் செல்லத்துரை, காட்டுபத்திர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அங்கையர் கன்னி, தர்க்கார் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் சாந்தி கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் உமாவிஜயன், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், விரக்குமார், திருக்குமார், அமுதா சரவணன், போதுராஜன், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News