உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி

Published On 2023-05-07 08:57 GMT   |   Update On 2023-05-07 08:57 GMT
  • மதுரை 20-வது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
  • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை

மதுரை 20-வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக சாலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டுகின்றனர்.

அப்போது ஊழியர்களின் கவனக்குறைவால் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு சேதமடைகிறது. இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாக தோண்டிய சாலைகளை சரி செய்யாமல் இருப்பதால் சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சாகசங்கள் செய்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியுள்ளது.

இதுகுறித்து கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சரி செய்யப்படவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதனால் பொது மக்கள் சாலையில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News