உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்பு

Published On 2023-02-28 07:57 GMT   |   Update On 2023-02-28 08:50 GMT
  • ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டன.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும்

சோழவந்தான்

வாடிப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், சேவை மையம் என ஒருங்கி ணைந்த வளாகம் கட்ட கடந்தாண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக காடுபட்டி கிராமத்தில் சர்வே எண் 566/37 மற்றும் 293/2-ல் அமைந்துள்ள அரசு நத்தம் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வருவாய் துறை மூலம் சர்வே பணி செய்து கொடுக்க காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் உள்ள வட்ட அளவையர் பிரிவில் சர்வே பணிக்குறிய தொகையான ரூ.1600-ஐ இ-சலான் மூலம் கடந்தாண்டு நவம்பர் 14-ல் செலுத்தப்பட்டது.

ஆனால் இதுவரை அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெறா மல் 4 மாதங்களாக சர்வே பிரிவினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தென்கரை குறுவட்ட அளவையர் சந்திரா தலைமையில் காடுபட்டி அரசு நத்தம் சர்வே எண். 566/37 மற்றும் வடகாட்டுபட்டி மந்தைகளம் சர்வே எண் 293/2-ல் உள்ள 1 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி நிலத்தை மீட்டனர்.

அப்போது ஊராட்சி தலைவர் ஆனந்தன், யூனியன் பொறியாளர் பூம்பாண்டி, மேற்பார்வை யாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனி ருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முத்துபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கி ணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News