மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம்
- மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மண்ட லத்துக்குட்பட்ட திண்டு க்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் தேனிமின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது குள்ளபுரம், வைகை டேம், பாளையம், கோட்டூர், கோழையனூர், வீரபாண்டி, காமாட்சிபுரம், வேப்பம்பட்டி, உத்தமபாளையம், அங்கூர்பாளையம், கம்பம், எச்.என்.பட்டி, ஆண்டி ப்பட்டி, மார்கேயன் கோட்டை மற்றும் பெரிய குளம் உள்பட 18 இடங்களில் மின்திருட்டு கண்டறி யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கை யாளர்களிடம் ரூ. 24 லட்சத்து 57 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கை யாளர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் பெறப்பட்டது.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 26 லட்சத்து 7 ஆயிரத்து 325 அபராதம் பெறப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430-37508 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று
மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.