உள்ளூர் செய்திகள்

சிறப்பு தடுப்பூசி முகாம்

Published On 2022-07-10 09:13 GMT   |   Update On 2022-07-10 09:13 GMT
  • 3,400 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • பொதுமக்களின் வருகையை பொறுத்து இன்று இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் .

மதுரை

மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் இன்று 31-வது மெகா தடுப்பு ஊசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. மதுரையில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் முகாம் நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

மதுரை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2,415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இங்கு 1,055 சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதிகளில் உள்ள 1,000 மையங்களில், 600 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3,415 மையங்களில், 1,655 பணி யாளர்கள் மூலம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கூறுகையில், "பொதுமக்களின் வருகையை பொறுத்து இன்று இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த 4 லட்சத்து 1707 பேர் தகுதி உடையவர்கள் ஆவர். இதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 740 பேர் மாவட்டத்திலும், 2 லட்சத்து 35 ஆயிரத்து 967 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அவர்கள் பூஸ்டர் ஊசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் இன்று நடந்து வரும் 31-வது சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவேளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

Tags:    

Similar News