உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி சேர்மன் முகமது யாசின், கமிஷனர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கடும் நடவடிக்கை

Published On 2022-08-10 08:24 GMT   |   Update On 2022-08-10 08:24 GMT
  • மேலூரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • தலைவர் முகமதுயாசின் தலைமையில் நடந்தது.

மேலூர்

மேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் முகமதுயாசின் தலைமையில் நடந்தது.

நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சூப் பிரண்டு ஜோதி, போக்கு வரத்து போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி அன்று அனைத்து அரசு துறையினருடன் இணைந்து எவ்வித பாகு பாடின்றி ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும். அதற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே ஆக்கிர மிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும், அகற்ற தவறி னால் அகற்றுவதற்கான செலவை அவர்களிடமே வசூலிக்கப்படும்.

பஸ் நிலையம் முன்புள்ள திருச்சி பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம் முன்பும், சேனல் ரோட்டில் உள்ள இரு பஸ் நிறுத்தங்களை பிரித்து தனித்தனியே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செக்கடி பஜாரில் உள்ள இரண்டு பஸ் நிறுத்தங்களை பிரித்து சிவங்கை ரோட்டில் ஆர்.சி. பள்ளி அருகிலும், திருவாதவூர் ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகிலும் அமைக்கப்படும்.

மேலூர் நகரில் 44 தள்ளு வண்டிகளுக்கு மட்டுமே வியாபரம் செய்ய தனி இடம் ஒதுக்குவது என்றும், மற்ற தள்ளுவண்டிகளுக்கு அனுமதி இல்லையென்றும், மீறி ரோட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News