உள்ளூர் செய்திகள்
- பாலமேடு அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையப்பட்டி கிராமத்தில் சின்ன அம்மன், அரியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கருடஹோமம், உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் 3 கால யாகபூஜைகள் முடிவடைந்ததும் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை வலையபட்டி, சின்னப்பட்டி தெரு விழா கமிட்டியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.