உள்ளூர் செய்திகள்

சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனியிடம், மாவட்ட நீதிபதி ரஜினி புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

மத்திய சிறை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய நீதிபதி

Published On 2023-02-10 09:19 GMT   |   Update On 2023-02-10 09:19 GMT
  • மத்திய சிறை நூலகத்துக்கு நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்.
  • இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை மத்திய சிறையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நூலகம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பலர் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெறுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறை டி.ஐ.ஜி. பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரத்யேக ஸ்டால் அமைக்கப்பட்டு புத்தகங்கள் அன்பளிப்பாக பெறப்பட்டன. சிவகங்கை புத்தக கண்காட்சியில் கலெக்டர் உதவியுடன் பொது மக்களின் பங்களிப்பாக 1000 புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் சிறப்பு ஸ்டால்கள் மூலம் புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது.

மதுரை கூடல்நகரை சேர்ந்த 92 வயது முதியவர் பாலகிருஷ்ணன் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கினார். ஈரோடு பகுதியைச் சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரை மத்திய ஜெயின் நூலகத்தில் இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க விரும்புவோர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர் மாவட்ட கிளைச்சிறைகளிலும் நேரடியாக கொண்டு வந்துதரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மத்திய சிறை நூலகத்துக்கு மதுரை மாவட்ட நீதிபதி ஏ.கே.கே. ரஜினி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வழங்கியுள்ளார். இது குறித்து நீதிபதி ரஜினி கூறுகையில், மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சிறைவாசிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு மேலும் புத்தகங்கள் பெற்று வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News