உள்ளூர் செய்திகள்

வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணி

Published On 2023-03-22 08:43 GMT   |   Update On 2023-03-22 08:43 GMT
  • மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை

உலக அளவில் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்க ணக்கில் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பிட்ட மாதங்களில் வெளிநாட்டு பயணிகளும் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட வருவார்கள்.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புராதன பழமை வாய்ந்தது. இங்கு பல அரிய சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் வியாபாரிகள் பலர் கடைகள் வைத்து நடத்தி வந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இந்த மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது.

அதன் பிறகு வீரவசந்தராயர் மண்டபத் தில் சேதமான பழமை வாய்ந்த சிற்பங்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தரா யர் மண்டபத்தை புனர மைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் ஒரு பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவி லில் விபத்து நடந்த பகுதியை நேரடியாக பார்வை யிட்டனர். அப்போது வீர வசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பது தொடர்பாக அறிவியல் ரீதியான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

தமிழக அரசு இந்த மண்டபத்தை புனரமைக்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பிறகு வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. அடுத்தபடியாக சிற்பிகள் குழுவுக்கான ஒப்பந்த வேலைகள் வழங்கப்பட்டன.

இந்த பணிகள் மந்தமாக நடந்து வந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிதலம் அடைந்த வீர வசந்த ராயர் மண்ட பத்தை புனர மைக்கும் பணியை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் உள்ள குவாரிகளில் இருந்து பிரம்மாண்ட கல் தூண்கள் லாரிகள் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.

அவைகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான அவனியாபுரம் செங்குளத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் வைக்கப்பட்டன. அங்கு கலைநயமிக்க கல் தூண்களை செதுக்கும் பணியில் சிற்பிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்ற னர். தயாரான கல்தூண்கள், பெரிய லாரிகள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அவைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News