உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2022-11-14 08:58 GMT   |   Update On 2022-11-14 08:58 GMT
  • ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 51 ஏழை எளிய மணமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
  • இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை

ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-

வெள்ள தடுப்பு மற்றும் வெள்ளமீட்பு நடவடிக்கை களை தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தற்போது தண்ணீரில் தமிழகம் தத்தளிக்கிறது. இதனால் மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் பருவ மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு தொகையை தி.மு.க. அரசு உடனடியாக வழங்க வேண்டும்.7 பேர் விடுதலைக்கு 2014-ம் ஆண்டு முதல் முதலாக விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை நிறைவேற்றினார். 7 பேர் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்த இருவர் மட்டும் தான்.

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழாவை முன்னிட்டும், ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் பிப்ரவரி 23-ந் தேதி, டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் 51 ஏழை எளிய மணமக்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் முன்னாள் மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கி றார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News